இலுப்பூர் அருகே பல்லவராயர் கால கல்வெட்டு கண்டெடுப்பு!

0
21

இலுப்​பூர் அரு​கே​யுள்ள மாராயப்​பட்டி கிராமத்​தில், புதுக்​கோட்​டையை ஆட்சி செய்த சிவந்​தெழுந்த பல்​ல​வ​ராயர் எனும் மன்​னர்​, சிவன் கோயிலுக்கு நிலத்தை கொடை​யாக வழங்​கியதை குறிக்​கும் கல்​வெட்டு கண்​டறியப்​பட்​டுள்​ளது.

புதுக்​கோட்டை மாவட்​டம் இலுப்​பூர் வட்​டம் மாராயப்​பட்​டியைச் சேர்ந்த கல்​லூரி மாணவி தீபி​கா, அங்​குள்ள கண்​டனி குளத்து வயல்​வெளி​யில் ஊன்​றப்​பட்​டுள்ள கற்​பலகை ஒன்​றில் எழுத்​துகள் இருப்​ப​தாக அளித்த தகவலின்​பேரில், பேராசிரியர் முத்​தழகன், பாண்​டிய நாட்டு பண்​பாட்டு மையத்​தைச் சேர்ந்த தொல்​லியல் ஆர்​வலர்​கள் நாராயண​மூர்த்​தி, ராகுல் பிர​சாத் குழு​வினர் அங்கு சென்று ஆய்வு செய்​த​போது, தான கல்​வெட்டு இருந்​தது கண்​டறியப்​பட்டு உள்​ளது.

தொடர்ந்​து, இந்த கல்​வெட்டு குறித்து முத்​தழகன் கூறியது: மாராயப்​பட்டி கண்​டனி வயலின் நடுவே கால​முனி கோயி​லின் எல்​லை​யாக வணங்​கப்​பட்டு வரும் கல் தூணுக்கு எதிரே ஊன்​றப்​பட்​டிருக்​கும் 3 அடி உயரம், இரண்​டே​கால் அடி அகலம் கொண்ட கற்​பல​கை​யின் ஒரு​புறத்​தில், ஆனந்த வருடம் ஆவணி 6-ம் நாள் ஆரியூர் அழகிய சொக்​க​நாத சுவாமிக்கு சிவந்​தெழுந்த பல்​ல​வ​ராயர், இந்த கண்​டனி வயலில் உள்ள நிலங்​களை சர்வ மானிய​மாக வழங்​கிய செய்தி எழுதப்​பட்​டுள்​ளது. மேலும், இந்த தானத்​துக்கு தீங்கு நினைப்​பவர்​கள் சிவதுரோகி​களாக கருதப்​படு​வர் எனவும் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

கல்​வெட்​டில் குறிப்​பிடப்​பட்​டுள்ள சிவந்​தெழுந்த பல்​ல​வ​ராயர், கி.பி. 17-ம் நூற்​றாண்​டில் புதுக்​கோட்டை மாவட்​டத்​தில் வெள்​ளாற்​றுக்கு வடக்கே உள்ள பகு​தி​களை ஆட்சி செய்த பல்​ல​வ​ராயர் மரபின் கடைசி அரசர் ஆவார். சிவபக்​த​ரான இவர், இந்த நிலக் கொடை போலவே குடுமி​யான்​மலை, திருக்​கோகர்​ணம் கோயில்​களுக்​கும் பல்​வேறு தானங்​களை வழங்​கி​யுள்​ளார்.

சேதுபதி அரசருடன் பிணக்கு: சிவந்​தெழுந்த பல்​ல​வ​ராயர் உலா’ எனும் நூல் இவர் மீது பாடப்​பெற்ற உலா நூலாகும். 96 வகை சிற்​றிலக்​கி​யங்​கள் இவர் மீது பாடப்​பெற்றன என்று இந்​நூல் கூறுகிறது. ராம​நாத​புரம் சேதுபதி அரசருடன் ஏற்​பட்ட பிணக்கு காரண​மாக இவர் கண்​டதே​வி​யில் கொல்​லப்​பட்​டார். அதன்​பிறகே, தொண்​டை​மான் அரசர்​களுக்கு புதுக்​கோட்​டை​யின் ஆட்​சிப் பொறுப்பு வழங்​கப்​பட்​டது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

மேலும், கல்​வெட்டு குறிக்​கும் அழகிய சொக்​க​நாத சுவாமி என்​பது அரு​கில் உள்ள ஆரியூர் சிவன் கோயி​லின் இறைவன் பெய​ராகும். இந்த கல்​வெட்​டில் கூறப்​படும் கண்​டனி வயலில் விளை​யும் நெல்​லில் ஒரு குறிப்​பிட்ட பங்கை கோயிலுக்கு இன்​றள​வும் இப்​பகுதி விவ​சா​யிகள் வழங்கி வரு​வ​தாக மாராயப்​பட்டி மக்​கள் தெரிவிக்​கின்​றனர்.

இந்த கல்​வெட்டு பலகை​யின் மற்​றொரு பக்​கத்​தில் சூரியன், சந்​திரன் மற்​றும் திரிசூலத்​தின் கோட்​டுரு​வங்​கள் செதுக்​கப்​பட்​டுள்​ளன. இவை சிவன் கோயிலுக்கு வழங்​கப்​படும் தானத்​தைக் குறிக்​கும். மேலும், இந்த கல்​வெட்டு பலகைக்கு எதிரே ஊன்​றப்​பட்​டுள்ள கல் தூணில் திரிசூலம் செதுக்​கப்​பட்​டுள்​ளது. இந்த தூண், கல்​வெட்​டில் தானமளிக்​கப்​பட்​ட​தாக குறிப்​பிடப்​படும் நிலத்​தின் எல்​லை​யைக் குறிக்​கும் சூலக்​கல் ஆகும்.

கி.பி. 1674-ல்.. கண்​டனி குளத்​தின் கரை​யில் வழி​பாட்​டில் உள்ள கால​முனி கோயி​லின் எல்​லை​யாக இந்த சூலக்​கல்லை உள்​ளூர் மக்​கள் வணங்கி வரு​கின்​றனர். இந்த கல்​வெட்டு கி.பி. 1674-ல் எழுதப்​பட்​டிருக்​கலாம் எனக் கருதப்​படு​கிறது. மேலும், புதுக்​கோட்டை வரலாற்​றில் முக்​கி​யத்​து​வம் வாய்ந்த கல்​வெட்​டு​களில்​ இது​வும்​ ஒன்​றாகும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here