இளைஞர்களிடையே வாய்ப் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் வாய் புற்று நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக வாய் மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் சத்திரசிகிச்சை வைத்தியர் தனுஜா தக்ஷிலி பத்திராஜா தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.