வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
தூரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற யாழ். மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்ட அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் ஏற்றுமதி பொருளாதாரத்தை மீள நிலைநாட்டும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நவீன விவசாயத்தை கிராமத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் என அதிபர் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த ரணில், “கடந்த நான்கு ஆண்டுகளில், இலங்கையின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்தது, அதில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர், நாடு தற்பொது வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு வருகிறது.நாடு வழமைக்கு திரும்பியதன் பின்னர் வேலையற்றோருக்கு வேலை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. பொருளாதார பரிவர்த்தனை சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே ஏற்றுமதி அடிப்படையிலான பொருளாதாரத்தை இந்த நாட்டில் உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என அதிபர் விக்கிரமசிங்க கூறினார்.