மின்சார கட்டண குறைப்பு தொடர்பான புதிய முன்மொழிவை எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.
சூத்திரத்தின்படி, முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவில் கட்டண திருத்த விலைக்கு இணங்குவதில் உள்ள சிக்கல்கள் காணப்பட்டமையே அதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த முன்மொழிவின் ஆய்வின் போது, மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கட்டண முன்மொழிவை விட ஒரு வீதத்தினால் கட்டணத்தை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அண்மையில் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சார சபை மூன்றாவது முன்மொழிவை சமர்ப்பித்திருந்தது.
அதன் போது, இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தத்திற்கான உத்தேச சதவீதம் 6% ஆகும்.