பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தக் கோரி, இலங்கை பலஸ்தீனத்திற்கான ஐக்கிய இயக்கம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பல்வேறு சிவில் சமூகக் குழுக்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்களை ஈர்த்த இந்த அணிவகுப்பு மற்றும் பேரணியில், நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலிஹ் உட்பட பல அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
இஸ்ரேலின் தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பெருமளவில் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், வன்முறையை நிறுத்த உடனடியாக சர்வதேசம் நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.




