இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு!

0
270

சந்திரன் குறித்த மிகச்சிறந்த தெளிவான புகைப்படங்கள் இந்தியாவிடம் உள்ளதாக இஸ்ரோவின் தலைவர் சோமநாத் அண்மையில் தெரிவித்துள்ளார்.

சந்திரனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட ‘சந்திரயான்-3’ விண்கலமானது கடந்த 23 ஆம் திகதி சந்திரனின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி தற்போது ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” அனைத்து கருவிகளும் சிறப்பாக செயற்பட்டு வருவதாகவும் செப்டம்பர் 3ஆம் திகதி வரை இயக்க முடியும் என்றும் சோமநாத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது உலகில் வேறு எங்கும் கிடைக்காத நிலவின் மிகவும் நெருக்கமான படங்கள் கிடைத்திருப்பதாகவும், அவற்றை வெளியிடுவதில் சிறிய தாமதம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பூமியின் 14 நாட்கள் நிலவின் ஒருநாள் என்று கணக்கிடப்படுவதால் செப்டம்பர் 3 வரை அவகாசம் இருப்பதாகவும் அனைத்து ஆய்வுகளும் சிறப்பாக நடைபெற்று வருவதையும் சோமநாத் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here