“புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று இறையருள் பெற்றுள்ள இஸ்லாமிய உறவுகளுக்கு நோன்புத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ .ஸ்ரீதரன் நோன்புப் பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
“பிறை கண்டு பிடி, பிறை கண்டு விடு” என்ற அடிப்படையில் நோன்பு நோற்று நோன்பை நிறைவு செய்வது இஸ்லாமியர்களின் முக்கிய கடமையாகும். அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் நபி (ஸல்) அவர்களின் சமுதாய மக்களுக்கு கிடைத்த மிக மிக பெரும் பாக்கியம் புனித ரமலான் மாதம். நமது இம்மை மறுமையின் எல்லா வாழ்வு வகையிலும் சிறப்பு அடையவும் அல்லாஹ்வின் திருப்பொறுத்தத்தையும் பொக்கிஷத்தையும் பெறவும் அபரிதமான எல்லா சகல நன்மைகளை பெறுவதற்கும் துன்பத்திலிருந்து நீங்குவதற்கும் சகல காரணங்களுக்கும் விளங்கும் மாதமாக திகழும் ரமலான் மாதத்தில் புனித நோன்பை நிறைவு செய்த அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.