இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய தூதுவர் எச்.சி. சந்தோஷ் ஜா நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் இணைந்து இலங்கை இந்திய உறவுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட கூடிய திறன் மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் ஆதரிக்கக்கூடிய வழிகள் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.