ஈக்குவடார் சிறையில் கலவரம் – 31 கைதிகள் உயிரிழப்பு!

0
6

ஈக்குவடார் நாட்டு சிறையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் கைதிகள் 31 பேர்  உயிரிழந்துள்ளனர்.

ஈக்குவடாரின் மச்சாலா நகரில் உள்ள சிறையில் இரு கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.

இந்த மோதலில்,  சிறைக்கைதிகள் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தை பயன்படுத்தி சில கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றசம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி டேனியல் நோபோவா உறுதி அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here