ஈரானில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல்: பொறுப்பேற்ற ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு

0
104

ஈரான் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்ட நான்கு ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஈரானில் நேற்று முன்தினம் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

அதனை சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஐஎஸ் அமைப்பு சம்பந்தப்பட்ட டெலிகிராம் சேனலில் இது குறித்து அறிக்கை வெளியாகி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் இராணுவ ஜெனரல் காசிம் சுலைமானியை கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவம், ட்ரோன் தாக்குதல் மூலம் படுகொலை செய்தது.

அவரது நான்காம் ஆண்டு நினைவு தினம் கடந்த புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அவரது நினைவிடத்தை நோக்கி ஊர்வலம் சென்றனர்.

இதன்போது குறித்த பகுதியில் இரண்டு முறை குண்டுகள் வெடித்தன.

இதில் 103 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 170 பேர் காயமடைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இத்தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here