எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவையை ஈரானிய அரசு முடக்கியுள்ளது.
ஈரானுக்குள் இஸ்ரேலின் மொஸாட் உளவாளிகள் ஊடுருவியிருந்தனர் என்றும், அவர்கள் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் உதவியுடன் முக்கிய தகவல்களை வெளியில் கசிய விட்டிருக்கின்றனர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து ஸ்டார்லிங்க் இணைய சேவையை பயன்படுத்த சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.