ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

0
115

ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹீம் ரைசி நேற்று ஹெலிகாப்டரில் பயணம் செய்த நிலையில் அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து துணை அதிபர் முகமது முக்தர் இன்று அதிபராக பதவியேற்று கொள்ள உள்ளார்

இந்த நிலையில் ஈரான் நாட்டின் அதிபர் மரணத்தை அந்நாட்டு பெண்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளதாக கூறப்படும் நிலையில் இது குறித்த வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

ஈரான் நாட்டு அதிபர் சர்வாதிகாரி போலவும் பழமைவாதியாகவும் நடந்து கொண்டார் என்றும் அவரது மரணத்திற்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்க மாட்டோம் என்றும் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஈரான் நாட்டின் பெண்களுக்காக பல உரிமைகள் இப்ராஹீம் ஆட்சியில் பறிக்கப்பட்டதாகவும் பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்களில் சிலர் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here