ஈரான் தாக்குதலில் 190 ஏவுகணைகள், 1,110 டிரோன்கள் இடைமறித்து அழிப்பு – UAE தகவல்

0
2

அமீரக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

அமீரகத்தின் மீது தொடர்ந்து ஈரானின் தரப்பில் ஏவப்பட்ட 9 பாலிஸ் டிக் ஏவுகணைகள் மற்றும் 109 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள் ளது. இந்த நடவடிக்கையை அமீரக வான் பாதுகாப்பு படைகள் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளன. நேற்று 112 டிரோன்கள் அமீரகத்தை நோக்கி வந்தன. அவற்றில் 109 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

இதில் தாக்குதல் தொடங்கியதில் இருந்து மொத்தம் 205 ஏவுகணைகள் நாட்டை நோக்கி வந்தன. அவற்றில் 190 ஏவுகணைகள் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டன. மேலும் 13 ஏவுகணைகள் கடலில் விழுந்தன. ஒரு ஏவுகணை அமீரகத்தின் நிலப்பரப்பில் விழுந்தது. அதேபோல் மொத்தம் 1,184 டிரோன்கள் ஈரானில் இருந்து தாக்க வந்தது. இதில் 1,110 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன. மீதியுள்ள 74 டிரோன்கள் கடலில் விழுந்துள்ளன.

தொடர்ந்து அமீரகத்தின் பைட்டர் ஜெட் விமானங்கள் மற்றும் வான் பாது காப்பு அமைப்புகள் தொடர் கண்காணிப்பு மற்றும் இடைமறிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக நாட்டை நோக்கி வந்த 8 கடல் சார் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. இதுவரை இடைமறிப்பு சம்ப வங்களில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

அதேபோல் இந்தியா, அமீரகம், பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 112 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் நாட்டில் அனைத்து ராணுவ படைகளும் தயார்படுத்தப்பட்டு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here