ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் பலி – பதற்றத்தில் ஜெருசலேம்!

0
4
இஸ்ரேலின் ஜெருசலேமிற்கு மேற்கே அமைந்துள்ள பெய்ற் ஷெமேஷ் (Beit Shemesh) நகர் மீது ஈரான் நடத்திய பலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜெருசலேமிற்கு மேற்கே உள்ள பெய்ற் ஷெமேஷ் நகரை இலக்கு வைத்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 27 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் மீட்புப் படையினரால் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது அண்மையில் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலுக்குப் பாரிய சேதத்தை ஏற்படுத்திய மிகக் கடுமையான தாக்குதல்களில் இதுவும் ஒன்று என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here