ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் – 6ம் ஆண்டு நினைவு

0
16

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் (21) 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

6 வருடங்களுக்கு முன் இதே நாளில் காலை சுமார் 8:45 மணியளவில், கொழும்பில் உள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு ஹோட்டல்களை குறிவைத்து பயங்கரவாதக் குழு தொடர் தற்கொலை குண்டுவெடிப்புகளை நடத்தியது.

மேலும், தெஹிவளை பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலிலும், தெமட்டகொடை பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் வெடிப்புகள் நிகழ்ந்தன.

இந்த தாக்குதல்களில் 9 தாக்குதலாளிகள் உட்பட 270 பேர் கொல்லப்பட்டனர், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் தொடர் நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலும் கட்டுவாப்பிட்டி புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் ஈஸ்ரர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 167 நபர்களை நம்பிக்கைக்குரிய நாயகர்கள் என்று பெயரிடப்பட்டுள்ளதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார்.

தாக்குதலில் உயிரிழந்த இந்த 167 பெயர்கள், வத்திக்கானால், புனிதர்களின் காரணங்களுக்கான டிகாஸ்டரி மூலம், நம்பிக்கைக்குரிய சாட்சிகளின் பட்டியலில் உத்தியோகபூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here