உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பும் நாடுகள் எவை?

0
140

உக்ரைனுக்கு ஆதரவாக வல்லரசு நாடான அமெரிக்கா தொடங்கி நெதர்லாந்து வரை பல்வேறு உலக நாடுகள் ஆயுதங்களை கொடுத்து உதவ முன்வந்துள்ளன.

உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடர்ந்துள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக வேறு நாடுகள் தலையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

ஆனாலும் உக்ரைனுக்கு ஆதரவாக வல்லரசு நாடான அமெரிக்கா தொடங்கி நெதர்லாந்து வரை பல்வேறு உலக நாடுகள் ஆயுதங்களை கொடுத்து உதவ முன்வந்துள்ளன.

1. ஜெர்மனி:
ஆண்டி-டேங்க் மிசைல், ஏர் டிபன்ஸ் கன்ஸ், 14 பாதுகாப்பு ARMOURED வாகனங்கள், 1000 ஆண்டி-டேங்க் ஆயுதங்கள் மற்றும் தரையிலிருந்து தாக்கும் 500 ஸ்ட்ரிங்கர் மிசைல்கள், 400 RPG ஆயுதங்களையும் அனுப்புகிறது ஜெர்மனி.

2. அமெரிக்கா:
350 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புமிக்க ஆயுதங்கள், ஜாவ்லின் ஆண்டி-டேங்கர் ஆயுதம், வானூர்திகளை தாக்கும் ஸ்ட்ரிங்கர் மிசைல் மாதிரியான அதிநவீன ஆயுதங்களை அனுப்புகிறது அமெரிக்கா.

3. பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்:
ஆண்டி-டேங்க் ஆயதங்கள், 1000 NLAW ஆண்டி ஆர்மர் சிஸ்டங்கள், மேலும் சுமார் 30 ராணுவ அதிகாரிகளை உக்ரைனுக்கு அனுப்பி மிசைல்களை கையாள்வது எப்படி என்ற பயிற்சியையும் அளித்திருந்தது பிரிட்டன்.

4. பின்லாந்து:
2500 துப்பாக்கிகள், 150000 தோட்டாக்கள், 1500 ஆண்டி-டேங்க் ஆயுதங்களுடன் உணவு, கவச உடைகள், ஹெல்மெட் மற்றும் முதலுதவி உபகரணங்களையும் கொடுத்துள்ளது பின்லாந்து.

5. ராக்கெட் மற்றும் ஸ்ட்ரிங்கர் ஆயுதங்கள் அனுப்புகிறது நெதர்லாந்து.

6. 2000 மெஷின் கன்கள் மற்றும் 3800 டன் எரிபொருளை அளிக்க உள்ளது பெல்ஜியம்.

7. கிரீஸ் 2 விமானங்கள் முழுவதும் ஆயுதங்களை அனுப்பியுள்ளது.

8. நார்வே நாடும் ஆயுதங்களை அனுப்புவது உறுதியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here