உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண தயார்: அதிபர் ட்ரம்ப்புடன் புதின் திடீர் ஆலோசனை!

0
10

ரஷ்யா – உக்​ரைன் பிரச்​சினைக்கு தீர்வு காணும் முயற்​சி​யில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈடு​பட்​டார். இதனால் அதிபர் ட்ரம்ப்​பும் –

ரஷ்ய அதிபர் புதினும் அலாஸ்​கா​வில் கடந்த ஆகஸ்ட் மாதம் சந்​தித்து பேசினர். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

உக்​ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்​குதலில் ஈடு​பட்​டது. இது அதிபர் ட்ரம்ப்​புக்கு ஏமாற்​றத்தை அளித்​தது. இதனால் உக்​ரைனுக்கு மீண்​டும் ஆயுதம் வழங்க அமெரிக்கா முடிவு செய்​தது. தொலை​தூரம் சென்​றும் தாக்கும் அமெரிக்​கா​வின் டொம ஹாக் ஏவு​கணை​யை, உக்​ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்​தது.

இது தொடர்​பான பேச்​சு​வார்த்தை உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி – அதிபர் ட்ரம்ப் இடையே வெள்ளை மாளி​கை​யில் இன்று நடை​பெறு​வ​தாக

இருந்​தது. இந்​நிலை​யில் ரஷ்ய அதிபர் புதின், அதிபர் ட்ரம்ப்​புடன் நேற்று முன்​தினம் போனில் பேசி​னார். அப்போது, உக்​ரைன் பிரச்​சினைக்கு தீர்வு காண்​பது குறித்து ஹங்​கேரி​யின் புடாபெஸ்ட் நகரில் விரை​வில் சந்​தித்து பேசலாம் என இரு​வரும் முடிவு செய்​தனர்.

இந்த பேச்சு குறித்து ரஷ்ய அதிபரின் கிரம்​ளின் மாளிகை விடுத்​துள்ள செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: அதிபர் ட்ரம்​பிடம், அதிபர் புதின் போனில் பேசிய விவரங்​கள் ஊடகத்​திடம் தெரிவிக்​கப்​ப​டாது. உக்​ரைன் பிரச்​சினைக்கு தீர்வு காண ரஷ்யா தயா​ராக இருப்​ப​தாக அதிபர் ட்ரம்​பிடம், அதிபர் புதின் கூறி​னார். இது தொடர்​பாக இரு​வரும் ஹங்​கேரி​யின் புடாபெஸ்ட் நகரில் விரை​வில் சந்​தித்து பேசுவர். இவ்​வாறு அந்த அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக ஊடகத்​தில் வெளி​யிட்​டுள்ள செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: இஸ்​ரேல் – காசா அமைதி பிரச்​சினை​யில் ஏற்​பட்ட வெற்​றி, ரஷ்யா – உக்​ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர உதவும் என நம்​பு​கிறேன். ரஷ்ய அதிபர் புதினும், நானும், ஹங்​கேரி​யில் புடாபெஸ்ட் நகரில் சந்​திக்​க​வுள்​ளோம். அப்​போது உக்​ரைன் பிரச்​சினை முடிவுக்கு வரலாம். உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்​கியை, வெள்ளை மாளி​கை​யில் சந்​திக்​க​வுள்​ளேன். அப்​போது அதிபர் புதினுடன் பேசிய விஷ​யங்​கள்​ குறித்​தும்​,இதர விஷ​யங்​கள்​ குறித்​தும்​ பேசப்​படும்​. இவ்​வாறு அதிபர்​ ட்ரம்​ப்​ கூறி​னார்​.

HinduTmail

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here