உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியது ரஷ்யா

0
9

போர் தொடங்கியதிலிருந்து உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, ஒரே நாளில் 477 ஆளில்லா விமானங்கள் மற்றும் 60 ஏவுகணைகள் உக்ரைன் மீது ஏவப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவற்றில் 249 சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், 226 இலக்குகளைத் தவறவிட்டதாகவும் உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

கிழக்கு உக்ரைன் உட்பட பல்வேறு பகுதிகளை குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன, அவை போர் முனைகளிலிருந்து வெகு தொலைவில் இருந்தன.

ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து போலந்தின் வான்வெளியைப் பாதுகாக்க போலந்தும் அதன் நட்பு நாடுகளும் போர் விமானங்களை பறக்கவிட்டன.

ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக கெர்சன் ஆளுநர் ஒலெக்சாண்டர் புருகுடின் தெரிவித்தார். செர்காசியில் ஆறு பேர் காயமடைந்தனர். லிவிவ் பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இதற்கிடையில், ரஷ்ய ஏவுகணை தாக்குதலை முறியடிக்கும் போது உக்ரைனின் F-16 போர் விமானம் விபத்துக்குள்ளானது, இதில் விமானி கொல்லப்பட்டார்.

ஏழு ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை தாக்கிய பின்னர் விமானம் விபத்துக்குள்ளானதாக உக்ரைனை் தரப்பினரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌயிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here