உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பமாகி ஆறு மாதங்கள் கடந்த நிலையில் உக்ரைன் ரயில் நிலையம் மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 22 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனின் கிழக்கு டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் உள்ள சாப்ளின் நகரில் நடந்த தாக்குதலில் பலியானவர்களில் ஐந்து பேர் வாகனத்தில் எரித்துக் கொல்லப்பட்டதாகவும், அந்தக் குழுவில் 11 வயது சிறுவனும் இருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை கூட்டத்தின் நடுவில் உக்ரைன் ஜனாதிபதி இந்தத் தாக்குதலை அறிவித்தார்.
மேலும் சுமார் 50 உக்ரைனியர்கள் காயமடைந்ததாக அவர் தெரிவித்தார்.