சிறியவர் முதல் பெரியவர் வரை இன்று அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக கூந்தல் நரைப்பது விளங்குகின்றது.முன்பெல்லாம் மூப்பெய்துவதை சான்றுகாட்டுவதாக விளங்கிய நரைமுடி தற்போது சிறியவர்க்கும் வருவதற்கு காரணம் என்னவென ஆராய்கையில் பல விடயங்கள் வெளிவந்துள்ளது.
அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசு, அதிகரித்த மனவழுத்தம், ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உட்கொள்ளல், ஆரோக்கியமற்ற அழகுசாதனப்பொருள் பயன்பாடு என பல காரணங்கள் இன்று கூந்தல் நரைத்தலை ஊக்குவிக்கின்றது.இதனை சரி செய்வதற்கு பலரும் பல்வேறு முறைகளை தேடி அலைந்து களைத்திருக்கையில், இதனை எளியமுறையில் ஒரு சில பொருட்கள் கொண்டு எப்படி சரி செய்யமுடியும், அதனை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்தும் தெரிந்துகொள்வோம்.
தற்போது இளநரையைப் போக்கக் கூடிய ஒரு சில இயற்கைவழிகள் என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.
முதலில் வெங்காயத்தின் தோலை உரித்து அதனை நன்கு வெட்டிய பின்னர் அதை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் ஆக எடுத்துக்கொள்ள வேண்டும், பின்னர் அந்த பேஸ்ட்டிலிருந்து சாறை மட்டும் வடிகட்டி எடுத்து அதனுடன் தேசிக்காய் சாற்றைக் கலந்து கலவை ஒன்றை தயாரிக்க வேண்டும், இந்த கலவையை முடி மற்றும் தலையில் இரவில் தடவி வந்தால் நல்ல மாற்றத்தை அவதானிக்க முடியும்.
மாயமாய் மறைந்து போகும்
1 கைப்பிடியளவு கோதுமைப்புல், 1 கைப்பிடியளவு பார்லி புல் என இந்த இரண்டு புல்களையும் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ள வேண்டும், இரவில் இந்த பேஸ்ட்டை முடி மற்றும் தலையில் தடவிக் கொள்ள வேண்டும், பின்னர் காலையில் எழுந்து தலையை கழுவினால் உங்கள் வெள்ளை முடி மாயமாய் மறைந்து போகும்.
4-5 காய்ந்த நெல்லிக்காயை மிக்ஸியில் போட்டு பொடியாக்கி அதனுடன் 2 மேசைக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் 2 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் என்பவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை இரவில் தலைமுடியில் தடவி விட்டு. காலையில் எழுந்து கழுவினால் உங்கள் வெள்ளை முடியில் மாற்றத்தை காணலாம்.
அதேபோல், 1 கைப்பிடியளவு கறிவேப்பிலையை ஒரு பானையில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும் பின்னர் அதனுடன் 1 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் கலந்து 8-10 நிமிடங்கள் இலையின் நிறம் கருப்பாக மாறும் வரை அடுப்பில் வைத்திருக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு இந்த கலவையை குளிரவைத்துவிட்டு இந்த எண்ணெயை இரவில் தலை மற்றும் முடியில் நன்றாக தடவினால் வெள்ளை முடி கருப்பாக மாறுவதோடு முடியும் நன்றாக வளரும். இதை வாரத்திற்கு 4-5 தடவை செய்தால் நல்ல பலனை காணலாம்.
2 மேசைக்கரண்டி கருப்பு எள் எண்ணெய், 2 மேசைக்கரண்டி எண்ணெய் இந்த இரண்டு எண்ணெயையும் ஒரு சிறிய பாத்திரத்தில் இட்டு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை தலையில தடவிக் கொள்ள வேண்டும். சில மணி நேரம் கழித்து தலையை நன்கு கழுவ வேண்டும். இது வெள்ளை முடியை கருப்பாக மாற்றி. உங்கள் கூந்தலுக்கு இயற்கையான நிறத்தை வழங்கும்.