பொடுகு தொல்லை என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையான அனைவருக்கும் பொதுவாக இருக்கக்கூடிய பிரச்சனையாகும். இந்த பொடுகு தொல்லையானது குறிப்பாக பெண்களுக்கே அதிகமாக ஏற்படுகின்றது.
வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை பொடுகுப் பிரச்னை உருவாக முக்கியக் காரணங்கள் ஆகும்.
இவற்றை எளியமுறையில் கூட நீக்க முடியும். தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
செம்பருத்தி இலை அல்லது பூ – 4 தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து செம்பருத்தி இலை அல்லது பூக்களை நன்றாக அரைக்கவும். அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு மசாஜ் செய்யவும். 2 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்கவும்.
வெந்தயம் – ¼ தேக்கரண்டி தயிர் – 1 தேக்கரண்டி நெல்லிக்காய் – 1 கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு வெந்தயம், தயிர், நெல்லிக்காய், கறிவேப்பிலை அனைத்தையும் தண்ணீர் சேர்த்து அரைத்து இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் தலையில் தடவி, 1 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்கவும்.
தேங்காய் எண்ணெய் – ½ கப் எலுமிச்சம் பழச்சாறு – 1 தேக்கரண்டி வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய்யில் எலுமிச்சை சாறு கலந்து, தலையில் தடவ வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின்பு வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்கவும்.
கொத்தமல்லி இலை – 1 கப் விளக்கெண்ணெய் – 3 மேசைக்கரண்டி கொத்தமல்லியை அரைத்து, அதில் விளக்கெண்ணெய் ஊற்றி கலக்க வேண்டும். அதைத் தலையில் தடவி 15 நிமிடம் ஊற வைத்துக் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தயிர் – 1 கப் எலுமிச்சம் பழச்சாறு – 1 மேசைக்கரண்டி தயிரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தலையில் தடவி 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரில் தலைக்கு குளிக்கவும்.
1 கைப்பிடி வேப்பிலையை அரைத்து அதில் 1 சிட்டிகை மிளகுத்தூள், ¼ தேக்கரண்டி வெந்தயப் பொடி, ¼ தேக்கரண்டி கற்பூரம், ¼ தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் கலக்க வேண்டும். இந்தக் கலவையைத் தலையில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் குளிக்க வேண்டும்.