உச்சம் தொடும் வெப்பத்தில் மிச்சம் இருக்கும் நீரை கவனமாக பயன்படுத்துங்கள்

0
125

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் அதிக வெப்பம் காரணமாக மத்திய மலை நாட்டில் உள்ள நீர்;த்தேக்கங்களின் நீர் மட்;டம் வெகு வேகமாக குறைந்து வருகின்றன.
இதில் இக்காலகட்டத்தில் வெப்பம் என்றுமில்லாதவாறு அதிகரித்து காணப்படுவதனால் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாக தாழ் இறங்குவதாக மின்சார துறைசார்; அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தேசிய மின் உற்பத்தக்கு பாரிய பங்களிப்பினை வழங்கி வரும் நீர்த்தங்களான மவுசாக்கலை மற்றும் காசல் ரி நீர்த்தேக்கங்களில் கடந்த காலங்களுக்கு மாறாக நாளொன்றுக்கு 3 அடி தாழ் இறங்குவதாக இந்த நீர்த்தேக்கங்களில் மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தங்களின் தொழில் செய்வது பாரிய சவாலாக இருப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையினையடுத்து மவுசாகலை நீர்தேக்கத்தில் நீர் தாழ்; இறங்கி நீர் மூழ்;கிய மஸ்கெலியா பழைய நகரம்,கதிரேசன் கோயில்,பள்;ளிவாசல்,புத்தர் நிலை ஆகியன தென்பட ஆரம்பித்துள்ளன.
இதே நேரம் ஹட்டன் மஸ்கெலியா,நோர்வூட் கொட்டகலை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பாரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. ஹட்டன்; நகர சபை பிரதேசத்தில் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் அதிகார சபையினால் வலியுறுத்தப்பட்டு வருவதுடன் இரண்;டு நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் பெற்றுக்கொடுக்கப்படுகின்றன.

இதனால் ஹட்டன் நகரில் உள்ள பல ஹோட்டல்களில் குடிநீர் பெற்றுக்கொள்வதற்காக மேலதிகமாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டு;ள்ளதாகவும் நாளொன்றுக்கு நீருக்காக 1800 செலவிட்டு வாகனங்கள் ஊடக நீரினை பெற வேண்டியுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

எனவே நீரின் தேவை அதிகமாக காணப்படுவதனால் நீரினை வீண் விரையமாக்காது மிகவும் கவனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எது எவ்வாறான போதிலும் வெப்பநிலை அதிகரிப்பதற்கு சூரின் இலங்கைக்கு உச்சம் தருவது ஒரு காரணமாக காணப்;பட்ட போதிலும் காடுககளுக்கு தீ வைப்பதனால் பல பிரதேசங்களில் நீர் ஊற்றுக்கள் வற்றிப்போய் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்டத்தில் பல நீர் போசன பிரதேசங்களில் அமைந்து வளமான வனப்பிரதேசங்கள் தீயினால் நூற்றுக்கணக்கான ஏக்கர் எரிந்து நாசமாகியுள்ளன.இதனால் நீர் நிலைகள் பாரிய அபாயத்தினை சந்தித்துள்ளதாக சூழ்ல் பாதுகாவலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த வெப்பநிலை மற்றும் வறட்சியான காலநிலை தொடருமானால் நீர் வழங்கல் சிக்கலான நிலையினை எதிர்நோக்கும் எனவும் இதனால் மின்சார உற்பத்தி விவசாயம் உள்ளிட்ட பல துறைகள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்;நோக்க வேண்டிய சூழ் நிலை ஏற்படும் என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது குறித்த மவுசாக்கலை நீர்த்; தேக்கத்தில் பல வருடங்களளாக மீனபிடியில் ஈடுபடும் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் நான் பல வருடங்களாக இந்த நீர்த்தேக்கத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு தான் வாழ்க்கை நடத்திவருகிறேன்.
ஆனால் ஒவ்வொரு வருடமும் சிவனொளிபாதமலை பருவ காலத்தில் வறட்சி ஏற்பட்டு நீPர்த்தேக்கத்தில் நீர் தாழிறங்குவது வழக்கம் ஆனால் இம் முறை என்றுமில்லாதவாறு நீர் தாழிறங்கிவருகிறது.

கடந்த காலங்களில் நாளொன்றுக்கு ஒரு அடி தாழ் இறங்கிய நீர் இப்போது நாள் ஒன்றுக்கு 3 அடி தாழிறங்குகிறது இதனால் வலைகள் விரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்களின் தொழில் பாதிகக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதே வேளை நீர் போசன பிரதேசங்களுக்கு மழை வீழ்ச்சி கிடைக்காததன் காரணமாக சிறிய நீர் மின்பத்தி நிலையங்களும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக சிறிய நீர் மின் உற்பத்தி நிலைய பொறுப்பாளர்கள் தெரிவி;க்கின்றனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here