உடபுஸல்லாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உடபுஸால்லாவ எமெஸ்ட் தோட்டத்தில் வீடொன்றினுள் 06/03/2022 ஞாயிற்றுக்கிழமை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த தீப்பரவல் காரணமாக வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் தீக்கரையாகியுள்ளதோடு வீட்டிலுள்ளவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் தாய்,தந்தை, இரு பிள்ளைகள் காணப்படுவதுடன் குறித்த நால்வரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.குறித்த தீப்பரவல் தொடர்பாக மேலதிக விசாரணைகளை உடபுஸல்லாவ பொலிசார் மேற்கொண்டு வருவதோடு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்