உடல் உறவில் ஈடுபட கட்டாயப்படுத்திய கணவரின் பிறப்புறுப்பை துண்டித்த மனைவி

0
223

மனைவியை விருப்பத்துக்கு மாறாக உடல் உறவில் ஈடுபட கட்டாயப்படுத்திய கணவரின் பிறப்புறுப்பை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக கணவன் மனைவிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் திகம்நகர் மாவட்டம் ராம்நகர் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

24 வயதுடைய இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். ஆனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் சில காலம் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இதையடுத்து பெரியவர்களின் தலையீட்டால் சமாதானம் செய்து வைத்த நிலையில் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர் , இந்த நிலையில் கடந்த டிசம்பர் 7ஆம் திகதி மனைவியுடன் உடலுறவில் ஈடுபட கணவர் முயன்ற நிலையில் இதற்கு மனைவி மறுப்பு தெரித்துள்ளார்.

இருப்பினும் கணவன் மீண்டும் மீண்டும் கட்டாயப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த மனைவி அருகே இருந்த கத்தியை எடுத்து கணவரின் பிறப்பு உறுப்பை துண்டித்துள்ளார்.

மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்த கணவன் மனைவி தனது பிறப்புறுப்பை துண்டித்து விட்டதாக பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில்தான் இந்த கொடூரச் செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here