உண்மைக்கும், அன்புக்கும் இலக்கணமானவர் நபிகள் நாயகம்.வடிவேல் சுரேஷ் வாழ்த்து.

0
219

அன்பு இருந்தால் தான் பிறர்க்கு நாம் உதவ முடியும் என்பதனை உறுதியாக நம்பி அதன்படி வாழ்ந்து காட்டிய அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த நல்வழிகளைப் பின்பற்றி, எங்கும் அமைதி நிலவிடவும், சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும் அனைவரும் ஒன்று பட்டு உழைத்திட மிலாதுன் நபி நாளில் உறுதியேற்போம் என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் வாழ்த்தியுள்ளார்.

அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நன்நாளை உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் “மீலாதுன் நபி” என்று மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இத்திருநாளில், இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்மைபேசுதல், தூய எண்ணத்தோடு வாழ்தல், ஏழை எளியோருக்கு உதவி புரிதல், அனைவரிடத்தும் அன்புடனும், நற்பண்புடனும் பழகுதல், புகழையும் அறத்தையும் தராத செயல்களை செய்யாதிருத்தல் என்பது இறைத் தூதர் நபிகள் நாயகம் உலகிற்கு நல்கிய போதனைகள் ஆகும்.

அன்பு இருந்தால் தான் பிறர்க்கு நாம் உதவ முடியும் என்பதனை உறுதியாக நம்பி அதன்படி வாழ்ந்து காட்டிய அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த நல்வழிகளைப் பின்பற்றி, எங்கும் அமைதி நிலவிடவும், சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும் அனைவரும் ஒன்று பட்டு உழைத்திட உறுதியேற்போம்.

இப்புனித மிக்க பொன்னாளில், இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய “மீலாதுன் நபி” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று அவர் வாழ்த்தியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here