பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான தனது தீர்மானம் மற்றும் அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு உண்மையான அறிக்கையை வெளியிடுவேன் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இந்த ஊடகவியலாளர் சந்திப்பை எதிர்வரும் நாட்களில் கொழும்பில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அனைத்து ஊடகவியலாளர்களையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது, நாட்டின் நிலைமை மற்றும் அதற்கான காரணங்களை வெளிப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.