கொழும்பு, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியேறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் புதன்கிழமை (9) பாராளுமன்றத்தில் 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதை அடுத்து,முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு நேற்றையதினம் சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய குறித்த சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமாக நடைமுறைக்குவந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்து சிறப்பு வரப்பிரசாதங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.