உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

0
67

இரத்துச்செய்யப்பட்ட உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாளுக்குப் பதிலாக நடைபெறவுள்ள புதிய பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி அட்டையை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும், அது கிடைக்காத பட்சத்தில் இணையத்தளத்திற்கு பிரவேசித்து அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அனுமதி அட்டை
எவ்வாறாயினும், பரீட்சார்த்திகள் இரத்து செய்யப்பட்ட பரீட்சைக்கு தோற்றிய அதே பரீட்சை நிலையத்தில் புதிய வினாத்தாளுக்கு தோற்றினால், அனுமதி அட்டை தேவையில்லை என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாள் இணையத்தளத்தில் கசிந்துள்ளதாக தெரியவந்ததையடுத்து, வினாத்தாளை முழுமையாக இரத்து செய்ய பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here