இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளை நடாத்துவது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் திங்கட் கிழமை (19) அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.
கொவிட் 19 காரணமாக குறித்த பரீட்சைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடத்துவதா? இல்லையா என்பது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, மாகாண கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி அது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த பரீட்சைகள் நடத்தப்படும் தினங்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.