உயிர் போனால் வருமா? ஏ.ஆர் ரகுமான் எங்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்! கொந்தளித்த ரசிகர்கள்

0
251

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியால் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் நேற்று கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு, ரசிகர்கள் சொல்லிலடங்காத அவதிக்கு ஆளாகினர் .

ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நடைபெற இருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் “மறக்குமா நெஞ்சம்” இசைக் கச்சேரி, மழையின் காரணமாக நேற்றைய திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இசைக்கச்சேரியை காணும் ஆவலில் நேற்று மதியம் முதலே ரசிகர்கள் கிழக்குக் கடற்கரைச் சாலை நோக்கி படையெடுத்ததால் இ சி ஆர் சாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

26 ஏக்கர் பரப்பளவில் சுமார் 40 ஆயிரம் பேர் வரை நிற்க இடம் உள்ளது என சொல்லப்பட்ட நிலையில் 30 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளே நிற்க முடியும் என்றும், ஆனால் அதை விட அதிகமாக டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற ரசிகர்கள் தெரிவித்தனர்.

மேலும் டிக்கெட் வாங்கி மைதானத்திற்குள் சென்றவர்களாலேயும் இசை நிகழ்ச்சியை பார்க்கமுடியாத அளவிற்கு இருந்தது.

தண்ணீர் கிடைக்கவில்லை, கழிவறை வசதி இல்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ரசிகர்கள் முன்வைத்துள்ளனர்.சிலரின் குழந்தைகள் அந்த கூட்டத்தில் காணாமல் போன நிலையில் கூட்ட நெரிசலில் பலருக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டது, இதையடுத்து எங்களின் உயிர் போனால் யார் பொறுப்பு என கொந்தளிப்புடன் கேட்டுள்ளனர்.

இசைநிகழ்ச்சியை ஒருங்கிணைக்க சரியான ஆட்கள் இல்லாததால் விஐபிகள், விலை உயர்ந்த இருக்கை பகுதிகளுக்கு திரளானோர் ஏறி குதித்து இடம்பிடித்துக் கொண்டாதாக சமூக வலைதளங்களில் கோபத்தை வெளிக்காட்டி வரும் ரசிகர்கள், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இதற்கு உரிய விளக்கத்தை அளித்தே தீர வேண்டும் என தங்களின் ஆதங்கத்தை வெளிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here