இராகலை பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட ஹைபொரஸ்ட் தோட்டத்தில் உரங்களை கொண்டு சென்ற லொறியை குறித்த பகுதி விவசாயிகள் மடக்கி பிடித்துள்ளனர். இது தொடர்பில் குறித்த பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்ற போது சிறு அளவில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு உரங்களை வழங்காமல் ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்பவர்களுக்கு மட்டும் உரங்களை சூட்சுமமான முறையில் வழங்கப்படுகின்றது.
நீண்ட காலமாக இந்நிலை தொடர்கின்றது இருப்பினும் அவ்வப்போது கிடைத்த சிறு அளவிலான உரங்களை வைத்து விவசாயத்தை முன்னெடுத்து வந்தோம். ஆனால் தற்போது சிறு விவசாயிகளை தவிர பெரியளவில் விவசாயம் செய்யும் தனவந்தர்களுக்கு உரங்களை கொடுப்பது விவசயிகளுக்கு இழைக்கும் பெரும் அநீதியாகும் என குறிப்பிட்டுள்ளனர்.
மாதாமாதம் வழங்கும் உரம் கிடைக்காமையினாலேயே குறித்த லொறியை மடக்கி பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்