பயிர்களுக்கு தேவையான உரம் இன்மையால் பயிர்கள் விளைச்சல் இல்லால் போவதாக கூறி இராகலை பகுதி விவசாயிகள் இராகலை கமநல சேவை திணைக்களத்தை (14/06/2021 ) திங்கட்கிழமை முற்றுகையிட்டனர்.
இராகலை கமநல சேவை திணைக்களத்திற்கு வரும் உரங்களை கமநலசேவை திணைக்களத்தில் வேலை செய்யும் உத்தியோகத்தர்கள் தங்களுக்கு தேவையானவர்களுக்கு வழங்குவதாகவும் தோட்டப்புற விவசாயிகளுக்கு உரம் வழங்காமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தே குறித்த திணைக்களத்தை முற்றுகையிட்டனர்.இதனால் சில நேரம் குறித்த திணைக்களத்திற்கு முன்னால் பதற்ற நிலை ஏற்பட்டது.
இது தொடர்பில் குறித்த விவசாயிகள் தெரிவிக்கின்ற போது…
நாங்கள் விவசாயத்தை நம்பியே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் உரத்தை பெரும்பான்மை சார்ந்தவர்களுக்கு மட்டும் அதிகமாக வழங்கி விட்டு எங்களை போன்ற தோட்டப்புற விவசாயிகளுக்கு உரம் தராமல் இருப்பதால் பயிர்கள்கள் அனைத்தும் நாசமாகி வருகின்றது. விளைச்சலும் மங்கி விட்டது. இத்தனை காலமும் பராமரித்து வந்த பயிர்கள் கண்முன்னே அழிந்து வருவதை எம்மால் பார்க்க முடியவில்லை. எனவே இதற்கான முடிவை அரசாங்கம் கூடிய சீக்கிரம் வழங்க வேண்டுமென இராகலை பகுதி விவசாயிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்