ஹோமாகம வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள ஆய்வுகூடத்திற்கு முன்பாக உறங்கிக் கொண்டிருந்த யாசகரை பெட்ரோல் ஊற்றிக் கொன்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த யாசகர் ஆய்வகத்தின் முன் தூங்கிக் கொண்டிருந்தபோது, சந்தேக நபர், “நீ குளிக்காதே, நீ குளிக்கவில்லை என்றால், தீ விபத்து ஏற்படும்” என்று இதற்கு முன்பும் தெரிவித்துள்ளார்.
அதன்படி நேற்று முன்தினம் (29ம் திகதி) இரவு,யாசகர் உறங்கிக் கொண்டிருந்தபோது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.அதன்போது, அங்கிருந்தவர்கள் யாசகரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதுடன், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (30) காலை அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பெரம்புலி ஆராச்சிகேயைச் சேர்ந்த 64 வயதுடைய தர்மதாச என்ற யாசகரே உயிரிழந்தவராவார். சந்தேகத்தின் பேரில் 27 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.