இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்தா சமீராவும் உபாதை காரணமாக ஆசிய கிண்னண கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும் சகலதுறை ஆட்டக்காரனுமான வனிந்து ஹசரங்க உலகக்கிண்ண தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற LPL தொடரில் வனித்து அசரங்கவிற்கு உபாதை ஏற்பட்டது.
இந்த உபாதை காரணமாக கடந்த 30ம் திகதி நடைபெற்ற ஆசிய கிண்னண கிரிக்கெட் தொடரில் இருந்தும் வனித்து அசரங்க விலகியிருந்தார்
மேலும் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்தா சமீராவும் உபாதை காரணமாக ஆசிய கிண்னண கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை.
இருப்பினும் அவர் தற்போது குணமடைந்து வரும் நிலையில் உலகக்கிண்ண அணியில் இணைந்துக்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனாவும் வேகப்பந்துவீச்சாளர்களான லஹிரு குமாரா மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகியோரும் உபாதையில் இருந்து தற்போது மீண்டுள்ளதால் உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.