பயிற்சி போட்டியில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது.10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கிண்ணம் கிரிக்கெட் போட்டிகள் வருகிற 5-ஆம் திகதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.
இதையொட்டி அணிகள் சிறப்பாக தயாராகும் வகையில் ஒவ்வொரு அணிக்கும் தலா 2 பயிற்சி ஆட்டங்களை ஐ.சி.சி. ஏற்பாடு செய்துள்ளது.
உலகக் கிண்ணத்திற்கான பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் 3 ஆட்டங்கள் நடக்கின்றன.
ஐதராபாத்தில் நடக்கும் ஒரு ஆட்டத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.திருவனந்தபுரத்தில் நடக்கும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடக்கும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது.
மூன்று ஆட்டங்களும் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.