உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்!

0
125

ஐக்கிய நாடுகள் சபையின் 2022ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில் இலங்கை 127ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, உலக மகிழ்ச்சி அறிக்கையில் 149 நாடுகளில் இலங்கை 129வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் லெபனான் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.146 நாடுகளின் பட்டியலில் ஜிம்பாப்வேக்கு அடுத்தபடியாக லெபனான் உள்ளது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. பாகிஸ்தான் 121வது இடத்திலும், இந்தியா 136வது இடத்திலும் உள்ளன.

இதேவேளை இந்த பட்டியிலில் முதல் 20 இடங்களில் ஆசிய நாடுகள் எதுவும் இல்லை. மேலும், இந்த பட்டியல் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு முன்னர் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here