
அமெரிக்கா உலகின் மிகபெரிய போர்க்கப்பலை கரிபியன் நோக்கி அனுப்பியுள்ளது.
இது போதைப்பொருள் கடத்தல்காரர்களை குறிவைக்கும் ஒரு பாரிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.
பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் நேற்று வெள்ளிக்கிழமை 90 விமானங்களை சுமந்து செல்லக்கூடிய யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் விமானம் தாங்கி கப்பலை மத்தியதரைக் கடலில் இருந்து நகர்த்த உத்தரவிட்டார்.
அண்மையில் கரீபியனில் அமெரிக்கா தனது இராணுவ இருப்பை அதிகரித்து வருகிறது, மேலும் தற்போது எட்டு போர்க்கப்பல்கள், ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் எஃப்-35 விமானங்களும் இந்த செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் படகுகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அண்மையில் கரிபியன் படகு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு போதைப்பொருள் பயங்கரவாதிகள்” கொல்லப்பட்டதாகக் அமரிக்கா கூறியது.
அந்த நடவடிக்கை கரீபியன் கடலில், ட்ரென் டி அரகுவா குற்றவியல் அமைப்பைச் சேர்ந்த கப்பலுக்கு எதிராக நடந்தது என பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த தாக்குதல்கள் பிராந்தியத்தில் கண்டனங்களைப் பெற்றுள்ளன, மேலும் நிபுணர்கள் அவற்றின் சட்டபூர்வமான தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.
டிரம்ப் நிர்வாகம் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக ஒரு போரை நடத்தி வருவதாகக் கூறுகிறது.
ஆனால் வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் ஒரு மிரட்டல் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்குவதாக நிபுணர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தல் அமைப்பின் தலைவர் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் இது போதைக்கு எதிரான விடயம் அல்ல “இது ஆட்சி மாற்றத்தைப் பற்றியது. அவர்கள் படையெடுக்கப் போவதில்லை, இது சமிக்ஞை செய்வது பற்றியது” என்று சாத்தம் ஹவுஸ் சிந்தனைக் குழுவில் லத்தீன் அமெரிக்காவின் மூத்த சக டாக்டர் கிறிஸ்டோபர் சபாடினி பிபிசியிடம் கூறியுள்ளார்.
வெனிசுலா இராணுவம் மற்றும் மதுரோவின் உள் வட்டத்தின் இதயங்களில் “பயத்தை ஏற்படுத்துவதற்காக” இராணுவக் குவிப்பு மேற்கொள்ளப்படுவதாக அவர் வாதிட்டார்.
வெள்ளிக்கிழமை ஒரு அறிவிப்பில், பென்டகன் தனது USS ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் விமானக் கப்பல், மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆகியவற்றை உள்ளடக்கிய அமெரிக்க தெற்கு கட்டளைப் பகுதிக்கு அனுப்பப்படும் என்று கூறியது.
மேலும் படைகள் “போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும், TCO-க்களை சிதைத்து அகற்றவும் இருக்கும் திறன்களை மேம்படுத்தும் மற்றும் அதிகரிக்கும்” என்று செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
		