உலகில் மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியால் அவதி – ஐ.நா அறிக்கை

0
104

2030 ஆம் ஆண்டுக்குள் பட்டினி இல்லாத உலகை உருவாக்கும் இலக்கை அடைவதற்குள் இது கடுமையான அச்சுறுத்தலாக அமையும்
உலகளாவிய ரீதியில் சுமார் 735 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதியுறுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை 2022ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர் பட்டினியால் அவதியுற்றவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள் பட்டினி இல்லாத உலகை உருவாக்கும் இலக்கை அடைவதற்குள் இது கடுமையான அச்சுறுத்தலாக அமையும் என்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தலைமை பொருளாதார நிபுணர் மாக்சிமோ டோரெரோ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here