உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு நுவரெலியா பிரதான தபாலகத்தில் இரத்ததான முகாம்.

0
260

ஒக்ரோபர் 9 உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு நுவரெலியா பிரதான தபாலகத்தில் இன்றைய தினம் 30.10.2021 இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

பிராந்தியா தபால் கண்காணிப்பாளர் எய்ச்,பி,என்,ஜி குணரத்தின , நுவரெலியா தபாலக அதிபர் ஜி,எம்,எஸ் குமாரசிங்க மற்றும் நுவரெலியா நகரபிதா சந்தனலால் கருணாரட்ன ஆகியோரின் பங்கு பற்றுதலோடு இடம்பெற்ற நிகழ்வில் நுவரெலியா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவுக்குட்பட்டவர்கள் வருகைத்தந்திருந்தன

இந்நிகழ்வில் நுவரெலியா தபாலக உத்தியோகத்தர்கள் இரத்ததானம் வழங்கினர்.குறித்த நிகழ்வில் நூற்றுக்கும் அஞ்சல் சேவை பணியாளர்கள்,மற்றும் பொதுமக்களும் இரத்ததானம் வழங்கியிருந்தனர் ..

டி.சந்ரு, செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here