உலக அதிசயம் ஈபிள் கோபுரத்தினை சுற்றி பார்க்க சென்று போதையில் தூங்கிய அமெரிக்கர்கள்

0
190

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் இருக்கும் ஈபிள் கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஈபிள் கோபுரத்தை சுற்றி பார்க்க சென்ற அமெரிக்கர் இருவர் மது அருந்திவிட்டு அங்கேயே தூங்கிய சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் இருக்கும் ஈபிள் கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது. வருடம் முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஈபிள் கோபுரத்தினை சுற்றிப் பார்க்க குடும்பத்துடன் வருகிறார்கள்.

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த இருவர் ஈபிள் கோபுரத்தை சுற்றி பார்க்க சென்று திரும்பி வரும் வழியில் அங்கேயே தூங்கியுள்ளனர். மறுநாள் காலை 9 மணிக்கு ஈபில் கோபுரத்தை திறக்க அங்கு வந்த பாதுகாப்பு காவலர்கள், இருவர் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் அவர்கள் அமெரிக்கர்கள் என்பதும் அதிக மதுபோதையில் இருந்ததால் அங்கேயே தூங்கியதும் தெரியவந்துள்ளது. குடிபோதையில் இருந்த அமெரிக்கர்கள் இரவு 10:40 மணியளவில் நுழைவு சீட்டுகளை வாங்கி மேலிருந்து கீழே செல்லும் போது பாதுகாப்பு தடைகளைத் தாண்டி கோபுரத்தின் 2ஆவது மற்றும் 3ஆவது நிலைகளுக்கு இடையில் உள்ள படிக்கட்டில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத இடத்தில் உறங்கியுள்ளனர்.

எனினும், அவர்கள் எந்தவொரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை.

இருவரும் விசாரணைக்காக பாரிஸ் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here