உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாட்டுக்கு வருகை

0
9
FILE PHOTO: World Health Organization (WHO) Director-General Tedros Adhanom Ghebreyesus attends a news conference in Geneva Switzerland July 3, 2020. Fabrice Coffrini/Pool via REUTERS/File Photo

உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) பணிப்பாளர் நாயகம் டொக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இன்று (12) இலங்கை வந்தடைந்தார்.

டொக்டர் கெப்ரேயஸ் தோஹாவிலிருந்து காலை 9.40 மணிக்கு கட்டார் ஏர்வேஸ் விமானம் QR 660 மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சக செயலாளர் அனில் ஜாசிங்க அவரை வரவேற்றார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் 78வது அமர்வில் பிரதம விருந்தினராக கலந்து கொள்வதற்காக அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு நாளை (13) முதல் 15 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறும்.

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்க இலங்கை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here