நியூஸிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணிக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நேற்று (15) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான அணியில், உப தலைவர் அஜின்கிஹா ரஹானே, Rohit Sharma, Shubman Gill, Cheteshwar Pujara, Hanuma Vihari, Rishabh Pant, Wriddhiman Saha, Ravichandran Ashwin, Ravindra Jadeja, Jasprit Bumrah, Ishant Sharma, Mohammad Shami, Umesh Yadav, Mohammad Siraj ஆகியோர் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக, கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர்கொண்ட நியூஸிலாந்து அணிக்குழாம் நேற்று (15) அறிவிக்கப்பட்டிருந்தது.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, நாளை மறுதினம் சதம்டனில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.