உலக தலைவர்கள் பட்டியலில் மோடி தொடர்ந்து முதலிடம்

0
149

சர்வதேச அளவில் பிரதமர் மோடி தொடர்ந்து உலக தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’, உலகளாவிய தலைவர்களின் பிரபலம் குறித்த சர்வேவை நடத்தியது.

அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘உலகளவில் பிரபலமான தலைவர் என்ற பட்டியலில் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு 76% அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் மெக்சிகோவின் அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோருக்கு 66 சதவீதம், மூன்றாவது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் பிரதமர் அலைன் பெர்செட்டுக்கு 58 சதவீதம் பெற்றுள்ளனர்.

பிரேசில் அதிபர் லுலா டா சில்வா நான்காவது இடம், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். ஆறாவது இடத்தில் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் முதல் ஐந்து இடங்களுக்குள் வரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here