உலர் திராட்சையால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

0
74

தினசரி உணவில் உலர் திராட்சைகளை சேர்த்துக்கொள்ள முடியாவிட்டாலும், அதனை ஊறவைத்த தண்ணீரை பருகுவதன் மூலமாக பல பலன்கள் கிடைக்கின்றன. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முதல் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை, திராட்சை தண்ணீர் சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

உலர் திராட்சை தண்ணீர் தயாரிப்பது எப்படி?

செயமுறை:

2 கப் தண்ணீரில் 150 கிராம் அளவுள்ள உலர் திராட்சையை இட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அந்த தண்ணீரை இரவு முழுவதும் நன்றாக ஊறவைக்க வேண்டும். பின்னர் காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி, மீண்டும் குறைந்த தீயில் சூடாக்கவும். இப்போது இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இதன் சுவையை மேலும் கூட்டவும், வைட்டமின் சி சத்தைப் பெறவும் விரும்பினால் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம். இந்த தண்ணீரை குடித்த பிறகு, அடுத்த 30 நிமிடங்களுக்கு எதையும் சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உலர்ந்த திராட்சை ஊறவைத்த தண்ணீரை தினமும் காலையில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் :

1. கல்லீரல் நச்சு நீக்கம் – இந்த பானம் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.

2. அமில சுரப்பை சீராக்குகிறது – அசிடிட்டி பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர் என்றால், உலர் திராட்சை தண்ணீரை குடிப்பது உங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவு ஒழுங்குபடுத்தப்படுத்த உதவும்.

Join in Our Whatsapp Group
3. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் – இரவு முழுவதும் உலர் திராட்சை ஊறவைக்கப்பட்ட தண்ணீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பரவலான கொரோனா வைரஸ் காரணமாக, நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது. எனவே கொரோனா போன்ற வைரஸைத் தடுக்க தினந்தோறும் உலர் திராட்சை ஊறவைத்த தண்ணீரை பருகுவது நல்லது.

4. இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது – உலர் திராட்சை தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிக்கும் முக்கிய பொருளாக உள்ளது. எனவே இது உங்களுடைய இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கவும் உதவுகிறது.

5. புற்றுநோயைத் தடுக்கும் – திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உங்கள் உடலைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.

6. குடல் இயக்கத்தை மேம்படுத்தும் – திராட்சையில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை சீரமைக்க உதவுகிறது. உலர் திராட்சை தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தும். இது மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை தடுத்து, குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

7. எடை குறைப்புக்கு உதவும் – உலர் திராட்சை தண்ணீரை மேலே குறிப்பிட்டுள்ள முறைப்படி தயார் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும் . திராட்சைப்பழத்தில் பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் நிறைந்துள்ளது. இது உடலில் சேரும் கொழுப்பை கரைக்க உதவுகிறது.

8. இரத்த அழுத்தம் சீராகும் – திராட்சையில் உள்ள பொட்டாசியம் உங்கள் உடலின் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.

9. இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்கும் – இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த தண்ணீரை குடிப்பது சிறந்த பலன் கொடுக்கும். உலர் திராட்சையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுவதோடுஇ ரத்த சோகையையும் தடுக்கிறது.

10. எலும்பு வலிமை அதிகரிக்கும் – திராட்சையில் எலும்புகளை உருவாக்க உதவும் போரான் உள்ளது. மேலும் எலும்புகளுக்குத் தேவையான கல்சியமும் திராட்சையில் நிறைந்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here