உழவியந்திரம் குடைசாய்ந்ததில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு

0
150

வவுனியா – பூவரசங்குளம் காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட மடுக்குளம் பகுதியில் உழவியந்திரம் குடைசாய்ந்ததில் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று (01) மாலை மடுக்குளம் பகுதியில் உள்ள குளத்தின் அணைக்கட்டில் மண் ஏற்றியவாறு உழவியந்திரம் ஒன்று பயணித்துள்ளது.

இதன்போது தீடீரென கட்டுப்பாட்டை இழந்த உழவியந்திரம் தலைகீழாக குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியது. இதனால் உழவியந்திரத்தின் பின்பகுதியில் அமர்ந்திருந்த சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு பூவரசங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும் முன்னரே அவர் மரணித்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த 15 வயதான ச.சதுசன் என்ற சிறுவன் மரணமடைந்ததுடன், மற்றொரு சிறுவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here