மே தினம், உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உறுதியையும் குறிக்கும் தினம் போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்தி அத்தகைய மகத்தான தினத்தில் நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் சந்தனலால் கருணாரட்ன தலைமையில் நகரசபை ஊழியர்கள் இணைந்து இப்போராட்டத்தினை முன்னெடுத்தன.
நுவரெலியா மாநகர சபை கட்டிடத்திற்கு முன்பாக ஆரம்பித்த போராட்டம் பிரதான வீதியினுடாக ஊர்வலமாக நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக வருகைத்தந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி மீண்டும் மாநகர சபை கட்டிடம் வரை சென்றனர்.
தொழிலாளர்களை விழுங்கும் விலைவாசி. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனமை , இதன் காரணமாக நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. விலை அதிகரிப்பினால் மேலெழும்பும் வாழ்க்கைச் செலவினை சமாளிக்க முடியாமல் மக்கள் திண்டாடுகின்றார்கள் என தெரிவித்தும் இதற்கு உடனடியாக அரசாங்கம் தீர்வினை வழங்க வேண்டும் என வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியும் , எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டி சந்ரு