ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பொன்னாலை பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று காலை சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
யாழ்ப்பாணம் – காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த நிலையிலே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைநகர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஊர்காவற்துறை பொலிசாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.