கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் எசல பெரஹெரா விழாவை முன்னிட்டு இன்று முதல் 09 ஆம் திகதி வரை கண்டி நகரில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எசல பெரஹெரா விழாவின் முதல் கும்பல் பெரஹெரா இன்று இரவு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கண்டிக்கு வருகைத்தரும் பக்தர்களுக்கு விசேட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 6,000 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் முப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.