மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் நியாயமான சம்பளத் தொகையான ஆயிரம் ரூபாவை வழங்கக்கோரி நாளுக்கு நாள் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் வலுத்துள்ள நிலையில் முதலாளிமார் சம்மேளனம் உடும்புப் பிடியாக 1000 தர முடியாதென சாக்குபோக்கு காட்டிவருகின்றனர்.
இதற்கெதிராக தற்பொழுது மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்ந்து அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மலையக முழுவதும் அடையாள வேலை நிறுத்தம் தொடர்ந்து நான்காவது நாட்களாக மேற்கொண்டவரும் வேளையில், கேகாலை மாவட்ட பெருந்தோட்டங்களிலும் தொடர்ந்தும் மக்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்லை தொகுதி தோட்ட மக்கள் முள்ளுகாமம் பகுதியில் ருவன்வெல்லை நிட்டம்புவ பிரதான பாதையை மறித்து மறியல் நேற்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
எட்டியாந்தோட்டை வீஓய தோட்டத்த்திலும், சப்புமல்கந்த தோட்டப் பிரிவுகளைச் சேர்ந்த 300ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சப்புமல்கந்த தேயிலை தொழிற்சாலை முன்பாகவும் 1000 சம்பளத்தை வழங்குமாறு கம்பனிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நன்றி – கமலதாஸ்