எட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட லெவன்ட் தோட்டத்தில் பழைமைவாய்ந்த குடியிருப்பில் ஏற்பட்ட சேதம் காரணமாக தற்காலிக கூடாரங்களில் ஒரு மாதகாலத்திற்கு மேலாக தோட்ட நிர்வாகத்தால் வேலை இடைநிறுத்தப்பட்டு சம்பளம் வழங்கப்படாமல் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு கேகாலை மாவட்ட இ.தொ.காவின் உபச் செயலாளர் அண்ணாமலை பாஸ்கரனின் வேண்டுக்கோளுக்கிணங்க பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இ.தொ.காவின் உபத் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் சமூல நல அமைப்புகளின் பங்களிப்புடன் ஒருமாதகாலத்திற்குத் தேவையான அத்தியாசியப் பொருடகள் பெற்றுக்கொடுக்கப்பட்டள்ளன.
கௌரவ செந்தில் தொண்டமான், அண்ணாமலை பாஸ்கரனின் வேண்டுகோளின் பிரகாரம் கடந்த இருவாரங்களுக்கு முன்னர் எட்டியாந்தோட்டை லெவன்ட் தோட்டத்திற்கு நேரடி விஜயத்தை மேற்கொண்டு தோட்ட நிர்வாகத்தால் மக்களுக்கு இழைக்கப்பட்டிருந்த அநீதிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதுடன், வேலை இடைநிறுத்தப்பட்டு தோட்ட நிர்வாகத்தால் ஒரு மாதகாலத்திற்கு மேலாக சம்பளம் வழங்கப்படாது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கையெடுத்ததுடன் பெருந்தோட்ட அமைச்சின் ஊடாக இந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான ஆலோசனைககளையும் எட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்தின் அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தார்.
இந்நிலையிலேயே கௌரவ செந்தில் தொண்டைமானின் ஏற்பாட்டில் அண்ணாமலை பாஸ்கர் லெவன்ட் தோட்டத்திற்கு நேரடியாக சென்று பயனாளிகளுக்கு ஒருமாதகாலத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை கையளித்தார்.